பிரேசில் நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் ராணுவ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெயீர் போல்சனாரோ தோல்வியை சந்தித்தார். எனினும் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், வாக்குகள் எண்ணப்படுவதில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில், தேர்தலில் வெற்றியடைந்த முன்னாள் ஜனாதிபதி இனாசியோ லுடா சில்வா
டந்த முதல் தேதி அன்று பதவியில் அமர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து, போல்சனாரோவின் ஆதரவாளர்கள், இதற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த எட்டாம் தேதி அன்று தலைநகர் பிரேசிலியாவில் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் அதிபர் மாளிகை ஆகியவற்றிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கினார்கள்.

அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. அதன் பிறகு, காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கட்டுப்படுத்தினார்கள். வன்முறையை ஏற்படுத்திய 200க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர். இந்நிலையில், தலைநகரில், கடந்த 8 ஆம் தேதி அன்று தீவிர வலதுசாரி எதிர்ப்பாளர்கள் கிளர்ச்சி நடந்தது.

இதனையடுத்து, நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் உண்டாகிவிடும் என்ற வருத்தம் ஏற்பட்டிருப்பதால், அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நாட்டின் ராணுவ தளபதியை நேற்று பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.