2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும்  அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடி வருவது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. புதன்கிழமை நடைபெற்ற பரபரப்பான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்த்து CSK அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், இறுதி கட்ட ஓவரில் மஹேந்திர சிங் டோனி சிக்சர் அடித்து, அணிக்கு வெற்றியைத் தந்தார். ஆனால், போட்டிக்குப் பிறகு நடந்த ஒரு செயல் எல்லோரது இதயத்தையும் உருக வைத்தது.

போட்டிக்கு பிறகு வெளியான வீடியோவில், டோனி முதலில் KKR வீரர்களுடன் கைகுலுக்கினார், பின்னர்  அம்பயர்களுடன் கைகுலுக்கி முன்னே சென்றார். ஆனால், ஒருவரை தவறவிட்டதாக அவருக்கு திடீரென நினைவு வந்தது. உடனே திரும்பி வந்து, KKR இளம் வீரர் அங்க்கிரிஷ் ரகுவன்ஷியுடன் கைகுலுக்கினார். இதையடுத்து, அந்த இளைஞரின் முதுகில் கை வைத்து, உற்சாகமாக வாழ்த்தினார். டோனியின் இந்த நடத்தை, எதிரணியின் இளம் வீரர்களிடமும் ரசிகர்களிடையிலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

அங்க்கிரிஷ் ரகுவன்ஷி, டோனியின் இந்த செயலில் ஆச்சரியத்துடன் நின்று, தனது நன்றியை வெளிப்படுத்தினார். வயது குறைந்த இளம் வீரர்களுக்கு ஊக்கமாக இருக்கும் இந்த செயல், டோனியின் கட்டுப்பாடு, பணிவு மற்றும் விளையாட்டு மனப்பான்மையின் சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. மேலும் இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் நேற்றைய போட்டியோடு சேர்த்து சிஎஸ்கே 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.