தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரேணுதேசாய். இவர் தமிழில் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் பார்த்திபன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குழந்தைகள் பிறந்த பிறகு விவாகரத்து செய்த பிரிந்துவிட்ட நிலையில் நடிகர் பவன் கல்யாண் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குழந்தைகளுடன் ரேணுதேசாய் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தது.

ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி திருமணத்தை ரேணு நிறுத்திவிட்டார். இந்நிலையில் தற்போது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரேணு தேசாய் சமீபத்தில் அறிவித்தார். இதை நடிகர் பவன் கல்யாண் ரசிகர் ஒருவர் விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார். அதில் நீங்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் அண்ணி. நீங்கள் கடவுளை தவறாக புரிந்து கொண்ட நிலையில் தற்போது அவருடைய மதிப்பை உணர்ந்திருக்கலாம்.

எனக்கு குழந்தைகள் பவன் கல்யாணுடன் இருப்பது தான் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். இதற்கு நடிகை ரேணு தேசாய் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உங்களுக்கு புத்திசாலித்தனம் இருந்தால் இது போன்ற முட்டாள்தனமான பதிவை வெளியிட மாட்டீர்கள். அவர்தான் என்னை பிரிந்து மறுமணம் செய்து கொண்டார். எனவே தயவு செய்து இது போன்ற கருத்துக்களை தவிர்க்கவும். மேலும் என்னை வேதனைப்படுத்தாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.