கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முரசங்கோடு பகுதியில் மரிய லூயிஸ்(74) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசுந்தா மேரி(70) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக மரிய லூயிசால் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தனக்கு சொந்தமான லட்சுமிபுரத்தில் இருக்கும் 5 சென்ட் நிலத்தை அண்ணனின் மூத்த மகனுக்கு நிபந்தனையுடன் எழுதி கொடுத்தார். சமீப காலமாக அசுந்தரி உடல் நலம் பாதிக்கப்பட்ட படுத்த படுக்கையானார்.

இந்நிலையில் பராமரிக்க வேண்டிய அண்ணன் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அண்ணன் மகனின் மனைவி வயதான தம்பதியினரை கவனிக்கவில்லை. எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. இதனால் மரிய லூயிஸ் தக்கலையில் பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு தீர்ப்பாயத்தில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயத்தின் நடுவரான சப்-கலெக்டர் கவுசிக் விசாரணை நடத்தி மரிய லூயிஸ் எழுதி கொடுத்த ஐந்து சென்ட் நிலத்துக்கான சொத்து ஆவணத்தை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.