தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில்  பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு கேட்டு வருகின்றனர். அந்தவகையில் ரூ.100 கோடி இழப்பீடு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்பி TRபாலு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜூலை முதல் வாரத்தில் 21 பேர் அடங்கிய திமுகவின் 2வது சொத்து பட்டியல் “DMK Files Part 2″ வெளியிடப்படும் என்று அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2வது பட்டியலில் புதிய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் மற்றும் ஆருத்ராவிலிருந்து எந்த அமைச்சருக்கு பணம் சென்றது போன்ற பல தகவல்கள் வெளியாகும் எனக் கூறி மீண்டும். அரசியலில் புயலை கிளப்பியுள்ளார்.