நாடு முழுவதும் செவிலியர் பணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த 2014 ஆம் வருடம் முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு பக்கத்திலேயே ரூபாய் 1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதாரத்திற்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக வருடம் தோறும் கூடுதலாக 15700 செவிலியர்கள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் திருப்பூர், நாமக்கல், விருதுநகர், அரியலூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகள் அருகில் புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்