தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆவார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரோஜா தற்போது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை சரமாரியாக விமர்சித்துள்ளதோடு அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறியுள்ளார். தன்னுடைய ஆரம்பகால அரசியலில் சனாதனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பவன் கல்யாண் தற்போது சனாதனத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் பவன் கல்யாணை தற்போது ரோஜா விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, பவன் கல்யாண் மக்கள் பணிகளை விட சினிமா சூட்டிங்கில்தான் அதிக நேரம் செலவிடுகிறார். ஆந்திரா பக்கம் வந்தால் காவி வேஷ்டி கட்டி கொள்கிறார். இப்ப புதுசா தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி கட்டி உள்ளார். திடீரென அந்த பக்தர் இந்த பக்தர் என்றெல்லாம் பேசுகிறார். அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறினார். மேலும் ரோஜாவின் விமர்சனம் தற்போது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.