தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த வருகிறார் 5-ம் தேதி முதல் கிராம கமிட்டி சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த பணிகள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடிவடையும். அதன் பிறகு கிராம தரிசனம் என்ற பெயரில் கிராமங்கள் தோறும் செல்வோம். தற்போது ஆட்சியில் பங்கு மற்றும் அதிகார பகிர்வு போன்றவைகள் எழுந்துள்ளது.

இதை நாங்கள் வரவேற்கிறோம். கூட்டணியை பொறுத்தவரையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் முடிவெடுக்கும். இப்போது நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கும் நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தார். எங்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அதிகார பகிர்வு குறித்து பேசியதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் தமிழகத்தில் தை பிறந்தால் காங்கிரஸ் கட்சிக்கு வழி பிறக்கும் என்று கூறினார்.