தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகையை எப்படி, எந்த துறை மூலம் வழங்குவது என்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேர்தலின்போது குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணா பிறந்த நாளான செப். 15-ம் தேதி முதல் அந்த தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்குவது இன்னும் அறிவிப்பாகவே உள்ளது என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். ‘புதுச்சேரியில் இதுவரை 65,000 பேருக்கு ரூ.1,000 உடனடியாக கொடுத்துள்ளோம். இதெல்லாம் முதல்வரும், ஆளுநரும் சேர்ந்து பணியாற்றியதாலே நடந்தது’ என தமிழக முதல்வருக்கும் ஆளுநருக்கும் பிரச்னை இருப்பதை சுட்டி காட்டினார்