தமிழ்நாட்டில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. பொதுவாக கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள். ஆனால் தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் கலப்பு திருமணங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு உதவி செய்யும் விதமாக அரசாங்கம் 2.5 லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்குகிறது. இந்த உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம். இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவுடன் தகுதியானவர்களுக்கு முதலில் 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பின்னர் உங்களின் 5 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு மீதமுள்ள ஒரு லட்ச ரூபாய் பணம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதன் பிறகு டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமண உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு முதல் அதிகபட்சம் 10 ஆம் வகுப்பு வரையில் படித்தவராக இருப்பது அவசியம்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு 21 வயது நிரம்பியிருப்பதோடு பெண்களுக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். இதைத்தொடர்ந்து [email protected] என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் அருகில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார், குடியிருப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ், வருமான சான்றித, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு, மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்றவைகளாகும். மேலும் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது முதல் கட்டமாக 1.5 லட்சம் கிடைக்கும்.