
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இலட்சக்கணக்கானோர் மாநாட்டுக்கு வருகை புரிந்திருந்தார்கள். தேசிய அளவில் விஜய் மாநாடு ட்ரெண்டானது. நடிகர் விஜய் தன் மாநாட்டில் கொள்கைகள் மற்றும் கட்சி கொடி விளக்கம் போன்றவற்றை தெளிவாக பாடல் மூலமாக அறிவித்தார். இந்நிலையில் நடிகர் விஜயின் மாநாடு நடைபெற்ற இடத்தில் ஒரு மது பாட்டில்கள் கூட கிடைக்கவில்லை என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான ஒரு நியூஸ் பேப்பரை தற்போது அந்த கட்சியினர் இணையதளத்தில் மிகவும் வைரளாக்கி வருகிறார்கள்.
விஜய் அவர்களுக்கு சேர்ந்த கூட்டம் பணத்திற்காகவோ மதுபானத்திற்காகவோ அல்லது பிரியாணிக்காகவோ சேர்ந்த கூட்டம் அல்ல அது ஒற்றை மனிதருக்காக சேர்ந்த கூட்டம் என கூறுவதற்கு சிறந்த உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. இதுவரை அனைத்து அரசியல் கட்சிகள் மாநாட்டிலும் ஏராளக்கணக்கான மது பாட்டில அள்ளி செல்வதற்காகவே பணியமர்த்தியவர்கள்.
இந்த மாநாட்டில் ஒரு பாட்டிலை கூட காணவில்லை என கூறியது மதுவுக்காகவோ பணத்திற்காகவோ சேர்ந்த ஒரு கூட்டம் விஜய் பின்னால் நிற்கிறது இதுவே அவருடைய வலிமை இதுவே அரசியலில் அவர் பதிவு செய்த முதல் வெற்றி எனக் கூறி அவரது தொண்டர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
