தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுடைய நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறதுm அவற்றில் ஒன்றுதான் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்குவதற்கான அறிவிப்பு .அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 1320 குழந்தைகளுக்கு இதுவரை அரசின் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளையும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும் முதல் காப்பீட்டு திட்டத்தில் இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு கூறியுள்ளார். தற்போது கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். கோரிக்கைகள் எழுந்துள்ளதால், விரைவில் ஆதரவற்ற குழந்தைகளும் இதில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.