கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த  சில நாட்களாகவே தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது