தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிஎச்டி படிப்பு தரம் இல்லை என கூறியுள்ளார். அரசு பள்ளிகளின் தரம் குறித்த அவரது முந்தைய கருத்துக்கு பிறகு, இது இன்னொரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உயர்கல்வி சிறப்பாக இருந்தாலும், பிஎச்டி படிப்பின் தரம் திருப்திகரமாக இல்லை எனவும், மாணவர்கள் முதுகலை படிக்கும் போதே நெட், ஜே.ஆர்.எப். தேர்வுகளை எழுத வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆளுநரின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆளுநர் ரவியின் தொடர்ச்சியான சர்ச்சை கருத்துக்கள், அவர் தமிழக அரசு மற்றும் மக்களுடன் மோதலைத் தூண்டுவதாகவே பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் ஆளுநரின் தலையீடு அதிகரித்து வருவதாகவும், இது மாநில உரிமைகளைப் பாதிப்பதாகவும் திமுக தொடர்ந்து குற்றம்  சாட்டி வருகிறது.