
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள x பதிவில், கடந்த 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் மூலம் நிலப் பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1 எனவும், தமிழர்கள் தினத்தை இணைக்க போராடிய எல்லை போராளிகளின் தியாகங்களையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இந்நிலையில் முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக அரசு ஜூலை 18 தான் தீபாவளி தினம் என்று அறிவித்திருந்தது. அதாவது கடந்த 1968 ஆம் ஆண்டு ஜூலை 18-இல் அண்ணாதுரை தமிழ்நாடு என பெயர் மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். முன்னதாக தனி மாநிலம் அமைந்த நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், திமுக அரசு அதனை மாற்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஜூலை 18 தான் தமிழ்நாடு தினம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே தன்னுடைய முதல் மாநாட்டில் திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்த அவர் குடும்ப அரசியல் செய்யும் அந்த கட்சி தான் முதல் எதிரி என்றும் கூறினார். தற்போது திமுக அறிவித்த நாளை விட்டுவிட்டு அவர் வேறொரு தினத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதாக அறிவித்ததால் திமுகவுக்கு எதிராக விஜய் செயல்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.
மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத்…
— TVK Vijay (@tvkvijayhq) November 1, 2024