கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ஷிவமொக்காவில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது திடீரென்று ஒலித்துக் கொண்டிருந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஆனது நிறுத்தப்பட்டது. பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா கையை உயர்த்தி பயங்கரமாக சத்தம் போட்டா.ர் பிறகு மைக் அருகே சென்ற அவர் யார் தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பியது. இங்கு கர்நாடகா கீதத்தை போடுங்கள் என்று திட்டியுள்ளார். உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் பாதியிலேயே தமிழ் தாய் வாழ்த்து பாடலை நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஒலிக்க செய்தார்கள்.

இந்த சம்பவத்தின் போது அண்ணாமலை மேடையில் நின்று கொண்டிருந்தார். ஆனால் இதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை. கர்நாடகாவில் அண்ணாமலை முன்பே தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அண்ணாமலை அது திமுக மேடை இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் மாநிலம் கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்து பாடல் ஒலிபரப்ப்பபடும். அதுதான் நியதி என்று கூறியுள்ளார். பின்னர் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அண்ணாமலையிடம் கன்னட கீதம் இசைக்கப்பட்ட பிறகுதான் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கபட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பொதுக்கூட்டத்தின் போது கன்னட நாட்டு கீதத்தை ஒலிபரப்புமாறு எம்எல்ஏ ஈஸ்வரப்பா கூறினார். ஆனால் ஆப்ரேட்டர்கள் தப்பாக தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பி விட்டார்கள். அந்த தமிழ் தாய் வாழ்த்து பாடல் கூட சரியான பாடல் இல்லை. அதனுடைய டியூன் மெட்டு சரியாகவே இல்லை. அது நம்முடைய தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பதாக இருந்தது. இதை ஈஸ்வரப்பாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் அவர் பாடலை நிறுத்த சொன்னார். மெட்டு சரியில்லாமல் ஒலிபரப்பப்பட்ட காரணத்தால் மீண்டும் தமிழ் தாய் பாடலை போட வேண்டாம் என்று நான் கூறி விட்டேன் என்று கூறியுள்ளார்.