
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தற்போது அக்கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த கொடியில் வாகை மலருடன் இரண்டு யானைகள் இருக்கிறது. அதாவது சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் நடுவில் வாகை மலருடன் இரண்டு போர் யானைகள் நிற்கிறது.
இந்த விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவின்போது நடிகர் விஜய் உறுதிமொழியையும் ஏற்றார்.
மேலும் இதைத்தொடர்ந்து அவருடைய கட்சி பாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அந்த பாடலில் முதலில் போர்க்களத்தில் இருந்து யானை வெளிவருவது போல் இருக்கிறது. அந்தப் பாடலில் தமிழகத்தின் பாரம்பரிய விலங்குகளான ஜல்லிக்கட்டு காளை, புலி மற்றும் யானை போன்ற விலங்குகள் இடம்பெற்றுள்ளது. மேலும் சங்க காலத்தில் போர் நடப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பைரலாகி வருகிறது.