
தமிழக வெற்றிக்கழகக் கொடியை அறிமுகம் செய்து வைத்த பிறகு தொண்டர்களிடம் விஜய் பேசினார். அவர் பேசியதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் முன்பாகவும் தமிழக மக்களின் முன்பாகவும் கொடியை அறிமுகம் செய்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்த கட்சி கொடிக்கான காரணம் மற்றும் கொள்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும். நாம் தொடர்ந்து தமிழகத்திற்காகவும் தமிழக மக்களுக்காகவும் உழைக்க வேண்டும். அதன் பிறகு கட்சி மாநாடு எப்போது என்று எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
கட்சி மாநாடு எங்கு நடைபெறும் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார். அவர் வெறும் 5 நிமிடங்கள் மட்டும்தான் பேசினார். சென்னை பனையூர் அலுவலகத்தில் விழா அரை மணி நேரம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வருகை புரிந்திருந்தனர். அவர்களை பார்த்து நடிகர் விஜய் பாசத்துடன் அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று கூறினார். மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள தன்னுடைய பெற்றோர் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறினார்.