தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 100 ரூபாய்க்கு வாங்கி தமிழக அரசு 75 ரூபாய் மானியம் கொடுத்து பொதுமக்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றது.

இந்த நிலையில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தேங்காய் எண்ணெய் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் ரேபி நிறுவனத்திடம் இருந்து தேங்காய் கொப்பரையை வாங்கி அரசு நேரடியாக தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் போது ஒரு லிட்டர் 120 ரூபாய்க்கு அடக்க விலையில் விற்பனை செய்யலாம். இந்த நிலையில் அரசின் மானியத்தை கழித்து மக்களுக்கு 50 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு ஆலோசித்தை விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.