தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் ஜூன் மாதம் வாங்காத பொருட்கள் சேர்த்து வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வாங்காதவர்கள் ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முழுமையாக விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் பல குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் கடைசி வரை பருப்பு மற்றும் பாமாயிலை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.