தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருள்களை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்த இயந்திரத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாகவும் அதனால் ரேஷன் பொருட்களை பெற காலதாமதம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனை கருதி பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக கண் கருவிழி பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தக் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை வழங்கும் முறை தமிழக முழுவதும் கொண்டு வரப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் . தற்போது பயோமெட்ரிக் உடன் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை வழங்கும் முறை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.