தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  தமிழக ரேஷன் கடைகளில் ‘ஊட்டி டீ தூள் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

‘ஊட்டி டீ’க்காக 100 சதவீத டீ தூளையும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறுதேயிலை விவசாயிகளிடம் பசுந்தேயிலையை நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.