தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் மாணவர்கள் தங்கள் வாழ்வை தீர்மானிக்கும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். அதாவது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 11ஆம் வகுப்பு தேர்வு செய்யும் பாடங்களை பொறுத்துதான் கல்லூரியில் படிக்கும் துறையை தேர்வு செய்ய முடியும்.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் இது போன்ற விழிப்புணர்வு எதுவும் இல்லை. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை வழங்க அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான இணையதள இணைப்பையும் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பதற்கான ஆலோசனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.