தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாக மாறிவிடக்கூடாது என்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன்களை வங்கிகள் மூலம் அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வி கடனை மாணவர்கள் தங்களுடைய கல்வியை முடித்த ஒரு வருடத்திற்கு பிறகு செலுத்த தொடங்கலாம். அதற்கான குறைவான வட்டி விதிக்கப்படும்.

இந்த நிலையில் திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என அறிவித்தது. தமிழகத்தில் 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வரும் நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திமுக அரசு தன்னுடைய வாக்குறுதியின் படி மாணவர்களின் கல்விக் கடனை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார்.