அடுத்த ஒரு மாதத்திற்குள், மக்கள் நல்வாழ்வுத்துறையில்2,250 கிராம சுகாதார செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 ஆக மொத்தம்  5,100 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 30,987 காலிப் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடையின்றி உயர்தர சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.