
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் தீபாவளி முதல் 90 மில்லி லிட்டர் மது வகைகளை விற்பனை செய்வதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து மது உற்பத்தியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 180 மில்லி குவாட்டர் பாட்டில் 140 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் 90 மில்லி என்பது ரூபாய்க்கு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் டெட்ரா உற்பத்தி செலவு அதிகமாகும் என்று மது உற்பத்தியாளர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக PET என்று சொல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் 90 மில்லி மதுவை வழங்க தயார் என்று அவர்கள் சொன்னதை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.