தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் புதுப்பிக்கப்பட்டு மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்ட 100 பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கின்றார். தமிழகத்தில் புகர் செல்லும் புதிய பேருந்துகள் நீல நிறத்திலும், நகர மற்றும் மாநகர பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் தற்போது இயக்கப்பட்ட வரும் நிலையில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத சேவை வழங்கும் பேருந்துகள் முன் மற்றும் பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இயக்கத்தில் உள்ள பேருந்துகளை புதுப்பித்து அவற்றுக்கு மஞ்சள் வர்ணம் பூசும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக 100 பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் இந்த பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.