
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி இன்று முதல் மே 22 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போதும் திண்டுக்கல், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, தர்மபுரி, சேலம், திருவாரூர், வேலூர், திருச்சி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதன் பிறகு இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் 40 கிலோ மீட்டர் வேக காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக இன்று தமிழகத்தில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மே 20-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.