தமிழக கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்தம் பாடல்கள் இடம் பெறக் கூடாது. அதுமட்டுமின்றி  மது அல்லது போதை பொருள் விநியோகம் செய்யக்கூடாது என்றும் அறிவித்துள்ளார்.

ஆபாச நடன காட்சிகள் இல்லை என்பதை விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்க கூடாது, பெண் கலைஞர்கள் ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ வேறு இன்னல்களை ஏற்படுத்தவோ கூடாது. மேலும் இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.