பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கோடை விடுமுறையில் மக்களின் வசதிக்காக  கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடைக் காலத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே மே மாத வருவாயில் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 2.12 கோடி பயணிகள் பயணித்ததாகவும், இதன்மூலம் ரூ. 513.41 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.1,236.36 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச வருமானமாகும்.