தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்ற நிலையில் அண்மையில் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அதில் காவல் துறைக்கான 101 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி சென்னையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக புதிதாக 2000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சென்னையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 57 போக்குவரத்து சிக்னல்கள் மாற்றம் செய்யப்படும். ரிப்போ கரன்சி மோசடியை கண்டுபிடிக்கும் செயின் பகுப்பாய்வு ரியாக்டர் கருவி ஒரு கோடியில் வாங்கப்படும். சென்னை சித்தாந்தரி பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவல் விடுதி அமைக்கப்படும். மெரினா மீட்பு பணிகள் நிலைய பணியாளர்களுக்கு இடர்படி 6000 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட எண்ணற்ற புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.