கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கோடை வெயிலில் சிக்கித்தவித்த தமிழக மக்களை குளிர்விக்கும் நாளாக இன்று அமையப்போகிறது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.