
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக எஸ். வெள்ளைதுரை என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தமிழக காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார். இவரை ரவுடிகளை ஒழிப்பதற்கு உயர் அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்த சிறப்பு அதிரடிப்படையில் இவரும் இடம் பெற்றிருந்தார். இதேபோன்று சென்னையில் பிரபல தாதா அயோத்தி குப்பம் வீரமணி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்த சிறப்பு படையிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.
இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி அவரை பணியிடை நீக்கம் செய்த உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டார். அதாவது கடந்த 2013ஆம் ஆண்டு திருப்பாச்சேத்தி காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட கொக்கி குமார் மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்த நிலையில் அந்த வழக்கு இன்னும் முடிவடையாததால் குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரை மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது ஏ டிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக உள்துறை செயலர் அறிவித்துள்ளார்.