தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித் தகுதிகளுக்கு ஏற்றவாறு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதி உடையவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது கட்டாயம்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு வேலைக்காக பதிவு செய்துவிட்டு 66.55 லட்சம் பேர் காத்திருப்பதாக புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி 30.94 லட்சம் ஆண்கள், 35.60 லட்சம் பெண்கள் மற்றும் 290 மூன்றாம் பாடினத்தவர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டோர் 16.87 லட்சம், 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டோர் 88.53 லட்சம், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் 18.51 லட்சம், 46 முதல் 60 வயதிற்கு உட்பட்டோர் 2.56 லட்சம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 1.47 லட்சம் பேர் காத்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.