
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஏற்படும் வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், வெள்ளநீர் தேங்குவதிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எனவும், பாதுகாக்க அமைத்த குழுவின் அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். கனமழை காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசின் திட்டங்கள் செயல்படுகிறதா என EPS கேள்வி எழுப்பியுள்ளார்.