
தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செய்யும் ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளும் மருத்துவர்களாக உருவாகியுள்ளனர். இவர்களது இந்த சாதனைக்கு காரணம் தமிழ்நாடு அரசின் 7.5% இடஒதுக்கீட்டு திட்டமே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவசாயக் குடும்பத்தின் மூன்று பிள்ளைகளும் எட்டாக் கனியாக கருதிய மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற கனவை 7.5% இடஒதுக்கீட்டின் மூலம் நனவாக்கியுள்ளனர். இவர்களது இந்த சாதனை, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.