2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அவ்வகையில்,   ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 15 ஆயிரத்து 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம் பெறும். நிரந்தர பூச்சி கண்காணிப்பு திடல்கள் அமைக்கப்படும்.