தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இ சேவை மையங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தொடங்குவதற்கான ஆலோசனை நடைபெற்ற வருகிறது.

இதன் மூலம் மக்கள் இ சேவை மையங்களில் மேற்கொள்ளும் அனைத்துவித செயல்பாடுகளையும் இனி ரேஷன் கடைகளில் செய்து முடித்து விடலாம். மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் 33 ஆயிரத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகளில் பாஸ்போர்ட் சேவை, சேவை கட்டணம் செலுத்துவது மற்றும் ஆதார திருத்தம் உள்ளிட்ட சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக india Post உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் வாங்கிய மாவட்டங்களில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதன் பிறகு தமிழக முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் அரசு தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.