
மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மது கடையில் திரும்பப்பெறும் திட்டத்தை தமிழக அரசு நீலகிரி, கோவை, தேனி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில் பெறும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் நாளொன்றுக்கு சராசரியாக 70 லட்சம் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. பாட்டில்களை திரும்ப பெறுவதன் மூலம் அரசுக்கு 250 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.