
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் பொருட்டு கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 கட்சி மாவட்டங்களாக பிரித்து 19 கட்சி மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்தார். இரண்டாவது கட்டமாக மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் பேசிய விஜய் கூறியதாவது, உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் தான் இதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தனை ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதும் எனக்காக துணை நின்று உழைத்தீர்கள். என்னுடன் பயணித்தீர்கள். நீண்ட கால கோரிக்கை எப்படி நாம் தற்போது கட்சியை தொடங்கி சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வருகிறோம். நிச்சயம் 2026 ஆண்டு வெற்றி பெறுவோம். இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்டமைப்புக்கு வலு சேர்க்கும் தொண்டர்களுக்கு நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும். நிர்வாக பொறுப்புகளை வழங்குவதில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என விஜய் கூறியுள்ளார்.