தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது பருவமழை காரணமாக தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் மற்றும் எஜிப்ட் வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக நோய்களை பரப்பி வருகின்றன.

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 7000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை அரசு முன்னிறுத்து வரும் நிலையில் தற்போது கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு கட்டிடங்களில் மக்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் நோய் பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.