தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விளக்கி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த அறிவிப்பை மீறி மதுபான கடைகளில் சில்லறை விற்பனையை விட பத்து முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பை மீறி கூடுதலாக மதுபானம் விற்பனை செய்தால் அந்த ஊழியர்கள் பணியில் இருந்த உடனடியாக நீக்கப்படுவார்கள் எனவும் ஒவ்வொரு மதுபானத்திற்கும் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ஊழியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மதிப்பு கொடுக்கும்படி அரசு அறிவித்துள்ளது.