தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 4g சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. வீடுகளுக்கு பைபர் சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது 4.45 லட்சம் பைபர் இணைப்புகள் உள்ளன. மாதம் தோறும் 16 ஆயிரம் புதிய இணைப்புகள் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறப்பான சேவையை வழங்க 18004444 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4G சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 440 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.