தமிழகம் முழுவதும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளில் இருந்து மீண்டும் மின்சாரத்தை பயன்படுத்துவதாலும் மின் நுகர்வோர் பயன்படுத்தும் குறைபாடுடைய மீட்டர்கள் மூலமாக மின்  வாரியத்திற்கு  பல கோடி ரூபாய் ஏற்பட்டு வருவதாகவும் இந்த வருவாய் இழப்பை தடுப்பதற்கு குறைபாடுடைய மீட்டர்களை உடனே கண்டறிந்து மாற்றுவதோடு,  துண்டிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலான மின் இணைப்பில் மீண்டும் மின்சாரம்  பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் படியும் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் குறைபாடுடைய மீட்டர்களை உடனே மாற்றுவது பொறியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.