தமிழகத்தில் சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை குறைபாடு ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதை மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.

மேலும் புற நோயாளிகள் பிரிவுகளில் சரியான நேரத்தில் மருத்துவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.