
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அந்த கட்டிடங்கள் 100% உறுதியுடன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளில் எதுவும் பராமரிப்பு பணிகள் தேவைப்பட்டால் உடனடியாக அது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் உடனடியாக சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு பள்ளிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.