தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் ஏராளமான இடைநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட ங்கள் காலியாக உள்ளன. அதே சமயம் பணியில் இருந்து பல்வேறு ஆசிரியர்களும் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளதால் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதால் தற்காலிக அடிப்படையில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம், முதுநிலை ஆசிரியர்களுக்கு 18,000 ரூபாய் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.