தமிழகத்தில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் விளையாடும் கலந்துரையாடியும் கதைபேசையும் கழிக்க வேண்டிய பருவத்தில் அவர்களை பள்ளிகளில் இருந்து பிரித்து பட்டறைகளுக்கு அனுப்புவது மாபெரும் குற்றம்.

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றுவது அவர்களுக்கு அளிக்கப்படுகிற மிகப் பெரிய விடுதலை, வாழ்நாள் பரிசு. தமிழக அரசு அதனை தன்னுடைய தலையாயக் கடமையாக கருதி விழிப்புணர்வை விதைத்து கொண்டு வருகின்றது.குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக முன்னேறி இருக்கிறது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு கொள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.