தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் கைரேகை பதிவு கருவி மூலமாக பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த கைரேகை பதிவில் வயதானவர்களுக்கு கைரேகை பதிவாவதில்லை எனவும் சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலதாமதம் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் தன் கருவிழி பதிவு முறையை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்களின் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்குவதற்கு தேவையான இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. தற்போது தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக கருவிழி ரேகை கருவி , கைரேகை பதிவு கருவி மற்றும் பிரிண்டர் சாதனத்துடன் ஒருங்கிணைந்த விற்பனை முனைய கருவி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த புதிய நடைமுறை தொடங்கப்பட உள்ளது.