தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாணவனின் திறமையை வெளிக்கொணரும் விதமாக ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் தமிழகத்தில் இயங்கி வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டுவிழாவில் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாணவர்கள் இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளி காட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் இதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் சாதாரணமாக ஆண்டு விழாவை நடத்தாமல் சிறந்த ஒலி, ஒளி அமைப்பை ஏற்படுத்தி மிகச்சிறப்பாக நடத்தும்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.